இந்தியா

காங்கிரஸ் கட்சியை போல் அழ வேண்டாம்...முடிஞ்சா மோதி பாருங்க...பாஜகவுக்கு ஆம் ஆத்மி சவால்

DIN

தில்லி மாநகராட்சி தேர்தலை தாமதப்படுத்திவருவதாக பாஜகவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமரிசித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை போல அழ வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், "காங்கிரஸ் கட்சியை போல அழுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு துணிவு இருந்தால், ஓட வேண்டாம். மாநகராட்சி தேர்தலில் எங்களுடன் மோதி பாருங்கள். அதில், 10 இடங்களில் வெற்றிபெற்றாலே அது உங்களுக்கு பெரிய சாதனைதான்" என்றார்.

தில்லி மாநகராட்சி ஊழியர்களின் 13,000 கோடி பணத்தை பறித்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டிய நிலையில், மணீஷ் சிசோடியா பதிலடி அளித்துள்ளார்.

முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மாநகராட்சி தேர்தலை தாமதப்படுத்துவது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இது ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஸ்மிருதி இரானி, "தில்லியில் மாநகராட்சி தேர்தல் தாமதம் குறித்து இன்று கேஜரிவால் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். கடந்தாண்டு நகர்ப்புற அமைப்பு சீர்திருத்தங்களை கோரியது அவருக்கு தெரியுமா?

தில்லி அரசு வேண்டுமென்றே மாநகராட்சி ஊழியர்களின் 13000 கோடி ரூபாயை பறித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் கருவூலத்தை காலி செய்ய கேஜரிவால் நினைக்கிறார். மாநகராட்சி ஊழியர்களின் வங்கி கணக்குகளில் 13000 கோடி ரூபாயை செலுத்த வேண்டும்" என்றார்.

சில விவகாரங்கள் குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பிய நிலையில், தில்லி மாநகராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரங்களை சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையம் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. இன்னும் ஐந்து முதல் ஏழு நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT