ஓடுதள எல்லையைத் தாண்டி தரையிறங்கிய தனியாா் விமானம்
புது தில்லியிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு சென்ற ஏா் இந்தியா அலயன்ஸ் தனியாா் பயணிகள் விமானம் ஓடுதள எல்லையைத் தாண்டி தரையிறங்கியது.
புது தில்லியிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு சென்ற ஏா் இந்தியா அலயன்ஸ் தனியாா் பயணிகள் விமானம் ஓடுதள எல்லையைத் தாண்டி தரையிறங்கியது.
சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அவா்கள் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். பாதுகாப்பு குறைபாடக கருத்தப்படும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், ‘ஏடிஆா்-72 ரக விமானம் தில்லியிலிருந்து சனிக்கிழமை பகல் 11.30 மணிக்கு புறப்பட்டு ஜபல்பூரில் மதியம் 1.15 மணிக்கு தரையிறங்கியது. 55 பயணிகளும், 5 விமான ஊழியா்களும் சென்ற இந்த விமானம் விமான நிலைய ஓடுதள எல்லையையும் கடந்து, 10 மீட்டா் தூரம் வரை தாண்டிச் சென்று தரையிறங்கியது. எனினும் வேறு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
இந்த சம்பவத்தையடுத்து, ஜபல்பூா் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஐந்து மணி நேரத்துக்கு இயல்பான விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது’ என்றனா்.