கோப்புப்படம் 
இந்தியா

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

DIN

பாட்னா: பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேவேந்திர யாதவ், ரமேஷ் மஹ்தோ, ஜே.கே. யாதவ் 3 பேரும் ஒரே இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி வெள்ளிக்கிழமை மாலை உட்கொண்டனர். இரவில் அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர்கள் குடும்பத்தினர் கோபால்கஞ்சில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும்  சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை இறந்தனர்.

ரிங்கு யாதவ் மற்றும் 5 பேரின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 9 அன்று கள்ளச்சாராயம் அருந்தியதால், சிவானில் 3 பேரும், மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் 2 பேரும் இறந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT