கொல்கத்தாவில் தீ விபத்து: 16 மணிநேரமாகப் போராடும் தீயணைப்புத் துறை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 16 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 16 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலுள்ள தங்கரா பகுதியில் உள்ள கிடங்கில் தோல் பதனிரும் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று (மார்ச் 12) மாலை 6.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
படிக்க | தூய்மைப் பணியைக் கைவிட மறுக்கும் முதல்வரை வீழ்த்திய ஆம் ஆத்மி எம்எல்ஏ-வின் தாய்
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 16 மணிநேரமாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ எளிதில் பரவுகிறது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. எனினும் கிடங்கில் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனம் அதிக அளவில் இருப்பதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.