இந்தியா

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் பகவந்த் மான்

DIN

பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியை பகவந்த் மான் இன்று ராஜிநாமா செய்தார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் பேரவைகளுக்கான தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. இதில், பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை ஆம் ஆத்மி கைப்பற்றியது.

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக சங்கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பகவந்த மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் இன்று கலந்துகொண்ட பகவந்த், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக நாளை மறுநாள் பகவந்த் மான் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT