உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்களை மருத்துவர்களாக்குவதை உறுதி செய்வோம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்களவை விவாதத்தில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
பின்னர், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷியாவிடம் உள்ள நட்புறவை பயன்படுத்தி உக்ரைனிலிருந்து வந்த மாணவர்கள் ரஷியாவில் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
பின்னர் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்களை மீட்க, பிரதமர் மோடி தலைமையில் 'ஆபரேஷன் கங்கா' திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. அவர்களை மத்திய அரசு கவனித்துக்கொள்ளும். அவர்களை அதிர்ச்சியில் இருந்து விடுவித்து பார்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. நாங்கள் அவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை மருத்துவர்களாக்குவதை உறுதி செய்வோம்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.