இந்தியா

'ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்' - தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

DIN

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று ஹிஜாப் சா்ச்சை விவகார வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா இதுகுறித்து, 'ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். மாணவர்கள் மதம், ஜாதி, இனம் என்று பிரிக்கப்படக் கூடாது.

பெண்கள் எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம். அது அவர்களின் உரிமை. ஆனால், கல்வி நிலையங்கள் என்று வரும்போது சீருடை முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாணவிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேலுமுறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT