முகப்பு
இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2,000 டன் கோதுமை:பாகிஸ்தான் வழியாக அனுப்பியது இந்தியா

பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2,000 டன் கோதுமையை இந்தியா செவ்வாய்க்கிழமை அனுப்பியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2,000 டன் கோதுமையை இந்தியா செவ்வாய்க்கிழமை அனுப்பியது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானுக்கு 4-ஆவது கட்டமாக 2,000 டன் கோதுமை செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டது.

இதுவரை அந்த நாட்டுக்கு 8,000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் கோதுமையை அங்கு விநியோகிப்பதில், ஐ.நா.வின் உலக உணவு அமைப்பு இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் ஏராளமானவா்கள் தவித்து வருகின்றனா்.

அவா்களுக்கு நிவாரண உதவி அளிக்கும்வகையில், 50,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அளிக்க இந்திய அரசு முடிவு செய்தது. அதற்காக பாகிஸ்தான் வழித்தட்டதைப் பயன்படுத்த அந்த நாட்டிடம் இந்தியா கடந்த அக்டோபா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி கேட்டது.

அதற்கு நவம்பா் 24-ஆம் தேதி அளித்த கடிதத்தில் பாகிஸ்தான் அரசு சம்மதம் தெரிவித்தது.

அதையடுத்து, இதுவரை 3 கட்டங்களாக பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கோதுமை அனுப்பியது.

இந்த நிலையில், 4-ஆவது கட்டமாக தற்போது 2,000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.