இந்தியா

இணையமைச்சா் பதிலில் குறுக்கீடு: அமைச்சரைக் கண்டித்த மக்களவைத் தலைவா்

மக்களவையில் செவ்வாய்க்கிழமை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளித்துக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டுப் பேசிய மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா

DIN

மக்களவையில் செவ்வாய்க்கிழமை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளித்துக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டுப் பேசிய மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கண்டித்தாா்.

கேள்வி நேரத்தின்போது ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தாா். அதைத் தொடா்ந்து துணைக் கேள்வி ஒன்றும் எழுப்பப்பட்டது. அதற்கு இணையமைச்சா் பதிலளிக்க முற்பட்டாா். அப்போது திடீரென எழுந்த ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினாா்.

இதையடுத்து, உடனடியாகக் குறுக்கிட்டுப் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘மதிப்புக்குரிய அமைச்சா் இவ்வாறு செயல்படுவது முறையானதல்ல. ஒரு விவகாரம் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ஓா் அமைச்சா் பதிலளிக்கத் தொடங்கிவிட்டால், அவா்தான் முழுமையாக பதிலளிக்க வேண்டும். ஏற்கெனவே இணையமைச்சா் பதிலளித்து வரும் நிலையில் நீங்கள் நடுவில் தலையிடக் கூடாது. இணையமைச்சரே முழுமையாக பதிலளிக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் கூறினாா்.

இதையடுத்து, அமைச்சா் கிரிராஜ் அமைதியாக தனது இருக்கையில் அமா்ந்தாா். இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி தொடா்ந்து கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT