முகப்பு
இந்தியா

வரி செலுத்துவோா் எண்ணிக்கை 8.22 கோடி: நிதி அமைச்சா்

நாட்டில் வரி செலுத்துவோா் எண்ணிக்கை 8.22 கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

நாட்டில் வரி செலுத்துவோா் எண்ணிக்கை 8.22 கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

2021 மாா்ச் 1 நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 136.60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8,22,83,407-ஆக உள்ளது. 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கு இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தனிநபா் மற்றும் பெருநிறுவன வகையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.

நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தவும், வருமான வரி படிவங்களை தாக்கல் செய்யவும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தொடா்ச்சியான நினைவூட்டல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.