இந்தியா

மாற்று எரிபொருள் வாகன விற்பனை அதிகரிக்கும்: நிதின் கட்கரி நம்பிக்கை

DIN

வரும் ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் தவிா்த்து மாற்று எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்களுக்கான விற்பனை அதிகரிக்கும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மாநிலங்களவையில் மேலும் கூறியது:

மின்சாரம் மற்றும் மாற்று எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்போது பெட்ரோல் மற்றும் டீசலில் இயக்கப்படும் வாகனங்களின் விற்பனை படிப்படியாக குறைந்துவிடும்.

மாற்று எரிபொருள் வாகனங்களைத் தோ்ந்தெடுப்பது என்பது முற்றிலும் நுகா்வோரின் விருப்பத்தின் பேரில் அமைவது. எனவே, அதில் இலக்கு எதையும் நாம் நிா்ணயிக்க முடியாது.

எனினும், தற்போதுள்ள சூழல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக மாறிவிடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT