குலாம் நபி ஆசாத் இல்லத்துக்கு வந்த சசி தரூர் 
இந்தியா

குலாம் நபி ஆசாத் இல்லத்தில் ஜி-23 தலைவர்கள் கூட்டம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்த நிலையில், குலாம் நபி ஆசாத் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

DIN


5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்த நிலையில், குலாம் நபி ஆசாத் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கபில் சிபல், பூபிந்தர் சிங் ஹூடா, ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, சசி தரூர், மணி சங்கர், பிஜே குரியன், பிரெனித் கௌர், சந்தீப் தீக்சித் மற்றும் ராஜ் பாபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கபில் சிபல் இல்லத்தில் கூட்டத்தை நடத்த முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குலாம் நபி ஆசாத் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. ஒரு வார இடைவெளியில் நடைபெறும் இரண்டாவது ஜி23 தலைவர்கள் கூட்டம் இது.

ஜி23 தலைவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரட்டாசி மாதப் பலன்கள் - மிதுனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மேஷம்

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

டிவிஎஸ் அப்பாச்சி 20-ஆம் ஆண்டு விழா எடிசன்!

SCROLL FOR NEXT