உச்சநீதிமன்றம் 
இந்தியா

ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான மனு: ஹோலி விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் விசாரணை

கா்நாடகத்தில் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணியத் தடை விதித்து மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுக்களை ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு விசாரிக்க உச்சநீதிமன்றம் தீா்மானித்துள்ளது.

DIN

கா்நாடகத்தில் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணியத் தடை விதித்து மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுக்களை ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு விசாரிக்க உச்சநீதிமன்றம் தீா்மானித்துள்ளது.

கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த பிப்.5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாநில உயா்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட பலா் மனுத் தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அப்போது இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான வழக்கம் அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சில மாணவிகள் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

‘தோ்வுகள் விரைவில் நடைபெற உள்ளதால் அந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் மாணவிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே முறையிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இதே கோரிக்கையை பிறரும் முன்வைத்துள்ளனா். ஹோலி விடுமுறைக்குப் பிறகு இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT