முகப்பு
இந்தியா

ஸ்ரீநகரில் துப்பாக்கிச் சூடு: தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடத்தப்பட்டு வரும் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை காலை சுட்டுக் கொன்றனர்.

Updated On : 16 மார்ச், 2022 at 8:47 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடத்தப்பட்டு வரும் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை காலை சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.