கோப்புப்படம் 
இந்தியா

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: என்கவுன்டர் செய்த அசாம் காவல் துறை

அசாம் மாநிலம் கெளஹாத்தியில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை காவல் துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். 

DIN

அசாம் மாநிலம் கெளஹாத்தியில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை காவல் துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். 

கெளஹாத்தியில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச்செல்லும்போது குற்றவாளி தப்பிக்க முயன்றதால், காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த குற்றவாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அசாம் மாநிலம் கெளஹாத்தியில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படம் எடுத்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பிகி அலி (20) காவல் துறையால் கைது செய்யப்பட்டார். 

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அவரை காவல் துறையினர் அழைத்துச் செல்லும்போது, தப்பித்து ஓடியுள்ளார். இதனால் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி பிகி அலியை பிடித்துள்ளனர். 

கெளஹாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு பெண் காவலர்களும் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சட்டம் ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குநர் ஜிபி சிங் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT