புதுச்சேரியில் பூஜ்யமான ஒருநாள் கரோனா பாதிப்பும், பலியும்
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பும், பலியும் பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பும், பலியும் பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார இயக்குநர் ஜி.ஸ்ரீராமுலு வெளியிட்ட அறிக்கையில்,
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்று பதிவாகாத நிலையில் மொத்த பாதிப்பு 1,65,766 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1,962 ஆகவும் உள்ளது.
நேற்று ஒரேநாளில் 410 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதம் பூஜ்ஜியமாகவும், குணமடைந்தோர் விகிதம் மொத்தம் 98.81 ஆகவும் உள்ளது.
நோயிலிருந்து விடுபட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,63,790 ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை இரண்டு தவணையாக மொத்தம் 16,08,864 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.