புது தில்லி: கேரளத்தில் இருந்து வெளியாகும் மலையாள நாளிதழான மாத்ருபூமியின் 100-ஆவதுஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி இணைய வழியில் பங்கேற்றுப் பேச இருக்கிறாா்.
சுதந்திரப் போராட்ட வீரா் கே.பி. கேசவ மேனனால் கடந்த 1923 மாா்ச் 18-ஆம் தேதி மாத்ருபூமி நாளிதழ் தொடங்கப்பட்டது. இப்போது 15 பதிப்புகள் மற்றும் பல்சுவைகளுடன் கூடிய 11 இதழ்களுடன் மாத்ருபூமி செயல்பட்டு வருகிறது.
நாளிதழ் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்குக் கொண்டாட அந்த நாளிதழ் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.