இந்தியா

அசாம்: ஒரே கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் ஒரே இடத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அசாம் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் ஒரே இடத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த சாய்கான் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட கழுகுகள் உயிரிழந்ததாகவும் இன்னும் சில கழுகுகள் மயங்கிக் கிடந்ததாகவும் அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.

இறந்த கழுகுகளின் அருகே ஆட்டின் எலும்புகள் கிடந்ததால் விஷம் வைத்து அவைகள் கொல்லப்பட்டனவா என்கிற கோணத்தில் வனத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.

மேலும், உடல்கூறு ஆய்விற்குப் பிறகே சரியான முடிவுக்கு வர முடியும் என்றும் இதற்கு முன் இத்தனை கழுகுகள் ஒரே இடத்தில் உயிரிழந்ததைப் பார்த்ததில்லை என அம்மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT