அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்) 
இந்தியா

4 மாநிலங்களில் வென்றும் ஆட்சி அமைக்கவில்லை: பாஜகவை விமர்சித்த கேஜரிவால்

நான்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார். 

DIN

நான்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது, ''5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றது. எனினும் பாஜகவில் உள்கட்சி பூசல் நிலவுவதால், வெற்றி பெற்ற மாநிலங்களில் இன்னும் ஆட்சி அமைக்க முடியவில்லை. 

பஞ்சாபில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியினர் உடனடியாக ஆட்சி அமைத்துள்ளனர். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டனர். பஞ்சாப் அரசும் திறம்பட செயல்பட ஆரம்பித்துள்ளது.

பகவந்த் மான் சிங்கின் உழைப்பை நாடே பெருமையாக பேசி வருகிறது. விவசாயிகளுக்கு அக்டோபர் மாதத்தில் நேர்ந்த பயிர் சேதங்களுக்கான இழப்பீடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து விவசாயிகளுக்கும் அவை வழங்கப்படும்'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT