இந்தியா

ஹிஜாப் தீர்ப்பு : நீதிபதிகள் 3 பேருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

DIN

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

ஹிஜாப் தொடா்பான வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் கடந்த 15-ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது. வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும்; ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கப்படி கட்டாயம் அல்ல; பள்ளிகள், கல்லூரிகளில் சீருடையே அணிய வேண்டும் என்று 129 பக்கங்களில்
தீா்ப்பு வழங்கியது.

இந்தத் தீா்ப்பால் அதிருப்தி அடைந்த இஸ்லாமிய மாணவிகள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனா். மேலும் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை எதிா்த்து வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டத்தில் இஸ்லாமியா்கள் ஈடுபட்டனா்.

இந்தநிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகளுக்கு இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். கொலை மிரட்டலைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக்பபட்டுள்ளது. அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT