3 தில்லியில் மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தில்லியில் 3 மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் 3 மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லி மாநகராட்சி கடந்த 2011-இல், தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி, கிழக்கு தில்லி மாநகராட்சி என 3-ஆகப் பிரிக்கப்பட்டது. ஆனால், சரியாகப் பிரிக்கப்படாததால் 3 மாநகராட்சிகளின் எல்லை, வருவாய், செலவினம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வேறுபாடு நிலவுகிறது. இதைக் களைவதற்கு 3 மாநகராட்சிகளையும் இணைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தில்லியில் உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இதனால், பாஜகவுக்கும் ஆளும் ஆத்மிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இந்த மசோதாவால் ஆளும் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.