இந்தியா

இந்தியாவில் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்குரூ.80 கோடி ஒதுக்கீடு

DIN

இந்தியாவில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழா்களின் நலன் கருதி, 2021-22-இல் ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்காக 2021-22-ஆம் ஆண்டில் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிதியுதவி மட்டுமன்றி மானிய விலை அடிப்படையிலான அரிசி, விலையில்லா ஆடைகள், பாத்திரங்கள், தகன நிதியுதவி, முகாம்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் அடங்கும்.

இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை தமிழக அரசுக்கு ரூ.74.82 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT