ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். 
இந்தியா

புல்லட் ரயில் திட்டத்திற்கு 89% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்குத் தேவையான சுமார் 89% நிலம் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக

DIN

புது தில்லி: மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்குத் தேவையான சுமார் 89% நிலம் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.

மும்பை-ஆமதாபாத் அதிவேக இரயில் (எம்.ஏ.எச்.எஸ்.ஆர்) திட்டத்தை குறித்து மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு "மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்,  ஒப்பந்தங்களை முடிப்பதில் தாமதம் மற்றும் கரோனா தாக்கம் ஆகியவற்றால் தாமதமானது" என்று ரயில்வே அமைச்சர்  வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

எம்.ஏ.எச்.எஸ்.ஆர் திட்டத்திற்குத் தேவையான 1,396 ஹெக்டேர் நிலத்தில் சுமார் 89 சதவீதம், தோராயமாக 1,248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT