இந்தியா

பஞ்சாபில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் வெளியீடு

DIN


பகத் சிங் நினைவு நாளையொட்டி லஞ்ச ஒழிப்பு உதவி எண்-ஐ பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், கட்கர் கலானில் பகத் சிங்கின் உருவ படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்திய பகவந்த் மான் லஞ்ச ஒழிப்பு உதவி எண்-ஐ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பகவந்த் மான் பேசியதாவது, “லஞ்ச ஒழிப்பு எண்-ஐ இன்றுமுதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவுள்ளோம். நீங்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்.

9501200200 என்ற எண்ணிற்கு வரும் புகார்களை ஆராய்ந்து, எங்களின் பணியாளர்கள் நேர்மையாகவும், கடுமையான நடவடிக்கையும் எடுப்பார்கள். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அதை விடியோ எடுத்து அனுப்புங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT