இந்தியா

கே-ரயில் திட்டம்: பிரதமருடன் நாளை(மார்ச் 24) பினராயி விஜயன் சந்திப்பு

DIN

கே-ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

கேரள அரசு கே-ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அதிவேக ரயில் மூலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 529.45 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணிநேரத்தில் பயணிக்கலாம்.

இந்த திட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவையிலும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்நிலையில், நாளை தில்லி செல்லும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திட்டம் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளார்.

இந்த திட்டத்திற்கு ரூ. 63,940 கோடி செலவாகும் என கேரள அரசு தெரிவித்த நிலையில், 2025-இல் திட்டம் முடிவடையும்போது ரூ. 1.24 லட்சம் கோடி செலவாகும் என நிதி அயோக் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT