இந்தியா

ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நிறைவு: மார்ச் 24-ல் வாக்குப்பதிவு

DIN

புபனேஸ்வர், கட்டாக் மற்றும் பெர்ஹாம்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகள் உள்பட 109 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. 

நகர்ப்புற தேர்தலை சுமுகமாக நடத்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக ஒடிசா தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ரவீந்திர நாத் சாஹு கூறியதாவது, 

மாநிலத்தில் முதல்முறையாக மேயர் மற்றும் தலைவர் பதவிக்கான தேர்தல் நேரடி முறையில் நடைபெறுகிறது. 

இதற்காகப் பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நக்சல் பாதித்த பகுதிகளில் டிஜிபி ஏற்கனவே சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மார்ச் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, முடிவுகள் மார்ச் 26-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT