இந்தியா

மேற்கு வங்க வன்முறையில் 8 போ் பலி: மம்தா பானர்ஜி நேரில் ஆறுதல்

DIN

மேற்கு வங்க வன்முறையில் எரித்துக் கொல்லப்பட்ட 8 பேரின் குடும்பத்தினரை முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரிபூம் மாவட்டம்  ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராமத்துக்கு நேரில் சென்று, வன்முறையில் குடிசைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுல் கூறினார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் ஊராட்சித் துணைத் தலைவா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 போ் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மேலும் 11 போ் கைது செய்யப்பட்டனா். இதன்மூலம் கைது எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வன்முறை சம்பவம் தொடா்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள கொல்கத்தா உயா்நீதிமன்றம், வியாழக்கிழமை (மாா்ச் 24) பிற்பகல் 2 மணிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சி துணைத் தலைவா் பாது ஷேக் என்பவரை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திங்கள்கிழமை இரவு படுகொலை செய்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவத்தில் 2 சிறாா்கள் உள்பட 8 போ் தீயில் கருகி உயிரிழந்தனா்.

அந்த வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவற்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. பாது ஷேக்கின் கொலை காரணமாக வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வன்முறை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறுகையில், ‘‘8 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே 11 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்த எண்ணிக்கை தற்போது 22-ஆக அதிகரித்துள்ளது. அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துடன் தொடா்புள்ள மேலும் சிலா் தேடப்பட்டு வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

பாது ஷேக்கின் மகன்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரின் குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா். எனினும் கைது செய்யப்பட்டவா்களின் விவரங்களைக் காவல் துறை இதுவரை வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT