இந்தியா

பஞ்சாப்: ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்வு

DIN


பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக தேர்தல் அலுவலரும், பேரவைச் செயலருமான சுரீந்தர் பால் அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் காலியான 5 மாநிலங்களவை இடங்களுக்கு ஆம் ஆத்மி போட்டியிட்டது. ஆம் ஆத்மி வேட்பாளர்களாக ஹர்பஜன் சிங், அசோக் மிட்டல், ராகவ் சத்தா, சந்தீப் பாதக், சஞ்சீவ் அரோரா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சண்டீகரில் உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளில் எந்தவொரு வேட்பாளரும் வேட்புமனுவைத் திரும்பப் பெறவில்லை. இந்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக தேர்தல் அலுவலரும், பேரவைச் செயலருமான சுரீந்தர் பால் அறிவித்துள்ளார்.

இதன்மூலம், மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் 8 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபிலிருந்து தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்கள் யார்?

  • ஹர்பஜன் சிங் - முன்னாள் கிரிக்கெட் வீரர்
  • அசோக் மிட்டல் - லவ்லி ஃபுரோஃபஷனல் பல்கலைக்கழக நிறுவனர்
  • ராகவ் சத்தா - ஆம் ஆத்மி எம்எல்ஏ
  • சந்தீப் பாதக் - இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன (ஐஐடி) பேராசிரியர்
  • சஞீச்வ் அரோரா - தொழிலதிபர்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT