இந்தியா

ஹைதராபாத் தீ விபத்து: பிகாருக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிலாளர்கள் உடல்கள்

தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள மரக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பிகாரைச் சோ்ந்த

DIN

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் உள்ள மரக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பிகாரைச் சோ்ந்த 11 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.  11 புலம்பெயா் தொழிலாளா்கள் உடல்கள் இங்கிருந்து பாட்னாவுக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

11 புலம்பெயா் தொழிலாளா்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, காந்தி மருத்துவமனையில் இருந்து இங்குள்ள விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அவர்களில் 6 பேரின் உடல்கள் இன்று காலை விமானம் மூலம் பாட்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 பேரின் உடல்களும்  மற்றொரு விமானத்தில் இன்று பிற்பகல் பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் பிகாருக்கு சென்றதாக காவல்துறை அதிகாரி  தெரிவித்தார்.

ஹைதராபாத் நகரில் போய்குடா பகுதியில் மரக் கிடங்கு செயல்பட்டு வந்தது. அங்கு பழைய செய்தித்தாள்கள், கண்ணாடிப் பொருள்கள் உள்ளிட்டவையும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை அதிகாலையில் அந்தக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அந்தக் கிடங்குக்கு மேலே கட்டப்பட்ட அறையில் தங்கியிருந்த புலம்பெயா் தொழிலாளா்கள் 11 போ் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனா். 

தீ விபத்துக்கான சரியான காரணம் விசாரணைக்கு பிறகு தெரியவரும் என தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT