இந்தியா

மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடகம்

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேக்கேதாட்டு அணை திட்ட விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே நாளுக்குநாள் அரசியல் பரபரப்பு கூடி வருகிறது. கடந்த திங்கள்கிழமை மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாதென மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த தீர்மானத்திற்கு கர்நாடக அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேக்கேதாட்டு அணை திட்டத்தை நிறுத்தும் உரிமை தமிழகத்துக்கு இல்லை எனவும், காவிரி நதியில் இருந்து பங்குநீா் தவிர, கூடுதலாக உபரிநீரையும் தமிழகத்துக்கு கா்நாடகம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்மாநில அரசு மேக்கேதாட்டு அணைக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவதன் மூலம் கா்நாடகத்தின் உரிமையை தமிழகம் பறிக்கப் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT