இந்தியா

உ.பி. பொதுத்தேர்வு தொடக்கம்: முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா

DIN

உத்தரப் பிரதேசத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேசத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

இதையடுத்து தேர்வு மையங்களில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளத் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தேர்வு மையங்களைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மண்டலவாரியாக கண்காணிக்க மாஜிஸ்திரேட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

'மொத்தம் 125 தேர்வு மையங்களில் சுமார் 4,830 கேமராக்கள் மற்றும் 272 டிவிஆர் பொருத்தப்பட்டுள்ளன. மென்பொருள் மூலம் அவையனைத்தையும் ஒன்றாக இணைத்துள்ளோம். அனைத்துப் பள்ளிகளிலும் தொடர் கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் புகார்கள் குறித்து, கட்டுப்பாட்டு அறை எண், '9453991942'ல் தெரிவிக்கலாம்' என தலைமை கண்காணிப்பு அதிகாரி ரவீந்திர குமார் சௌகான் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT