உபி முதல்வராக நாளை (மார்ச் 25) பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத் 
இந்தியா

உபி முதல்வராக நாளை (மார்ச் 25) பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்க உள்ளார்.

DIN

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில் வியாழக்கிழமை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நாளை உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ளார்.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித்ஷா கலந்து கொண்டார். 

தொடர்ந்து அரசை அமைப்பதற்கு ஆளுநரிடம் யோகி ஆதித்யநாத் உரிமை கோரியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளாா்.

பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்களும் விழாவில் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வருக்கு அமைச்சா் காந்தி தலைமையில் வரவேற்பு

9 நாள்களுக்குப் பிறகு டன் கணக்கில் சிக்கிய மீன்கள்

பெளா்ணமி விளக்கு பூஜை

கோவில்பட்டியில் தென் மண்டல குழந்தைகள் அறிவியல் மாநாடு

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

SCROLL FOR NEXT