இந்தியா

செலவினங்களைக் குறைத்த சுகாதாரக் காப்பீட்டு திட்டம்: மத்திய அரசு

DIN

புதுதில்லி: ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா(AB-PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.37,185 கோடி மதிப்பிலான மருத்துவச் சேவைகளுக்கான சுகாதாரக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் செப்டம்பர் 2018 இல் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வரை ரூ.37,185 கோடி மருத்துவச் சேவைகளுக்கான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதார சேவைகளை பயனாளிகள் தாங்களாகவே பயன்படுத்திக் கொண்டால், இத்திட்டத்தின் கீழ் செலவழிக்கப்பட்டதை விட 1.5-2 மடங்கு அதிகமாக செலவழித்திருக்கும் என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்தார்.

திரும்பப்பெற இயலாத செலவினங்களைக் குறைப்பதில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகப் செயல்பட்டுள்ளது என்று எழுத்துப்பூர்வமாக அமைச்சர் பதில் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT