முகப்பு
இந்தியா

ஏழைகளுக்கு உதவ, திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த துபை பக்தர்

துபையைச் சேர்ந்த ஏழுமலையான் பக்தர் ஒருவர், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
ஏழைகளுக்கு உதவ, திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த துபை பக்தர்
பகிர்:

திருப்பதி: துபையைச் சேர்ந்த ஏழுமலையான் பக்தர் ஒருவர், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏழை மற்றும் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் நலத்திட்டங்களுக்கு இந்த நன்கொடையைப் பயன்படுத்துமாறு அந்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை திருமலை திருப்பதிக்கு நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்த துபையில் கணக்குத் தணிக்கையாளராக பணியாற்றும் எம். ஹனுமந்த குமார், திருமலை திருப்பதி தேவஸ்தான் நிர்வாகி ஒய்வி சுப்பா ரெட்டியிடம் ஒரு கோடிக்கான வரைவோலையை வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →