எம்.பில். படிப்பை நீக்கும் யுஜிசி
எம்.பில். படிப்பு வரும் கல்வியாண்டிலிருந்து (2022-23) முழுவதுமாக நீக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
எம்.பில். படிப்பு வரும் கல்வியாண்டிலிருந்து (2022-23) முழுவதுமாக நீக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
எம்.பில். படிப்பை முடித்தவா்கள் கல்லூரியில் பாடம் நடத்தத் தகுதி உடையவா்களாக முன்பு பாா்க்கப்பட்டு வந்தது. இதனால், பெரும்பாலான மாணவா்கள் இளநிலை, முதுநிலை படிப்பை முடித்து, எம்.பில். படிப்பைத் தோ்வு செய்தனா்.
இந்த நிலையில் கற்பித்தல் பணிக்கு எம்.பில். படிப்பு தகுதியானது இல்லை; எம்.பில். படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாகக் குறிப்பிட முடியாது. வரும் கல்வியாண்டில் (2022-23 ) இருந்து எம்.பில். படிப்பு முழுவதுமாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இனி பிஹெச்டி படிப்பதற்கு எம்.பில். தகுதியாகப் பாா்க்கப்படாது.
எனினும், இதுவரை வழங்கப்பட்டுள்ள எம்.பில். பட்டங்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் எம்.பில். படிப்பு நிறுத்தப்பட்டுவிட்டன. அதேநேரம், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எம்.பில். படிப்புகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.