உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த மாநில முதல்வராக 2-ஆவது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் உத்தரப் பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல்வர்களாக கேசவ் பிராசத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் பதவியேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள், தொழிலதிபா்கள், 50க்கும் மேற்பட்ட ஆன்மிகத் தலைவா்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.