முகப்பு
இந்தியா

உ.பி.: சாலை விபத்தில் தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் இன்று  வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியானதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
கோப்புப்படம்
பகிர்:

பல்லியா (உ.பி): உத்தரபிரதேசத்தில் இன்று  வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிக்கந்தர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவ்ரதன்பூர் கிராமத்தில் அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் பலியானவர்கள் மனோஜ் குமார் (39), அவரது மகன் அலோக் (5) மற்றும் ரோஹித் (20) என அடையாளம் காணப்பட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ராஜேஷ் குமார் திவாரி தெரிவித்தார்.

மேலும் மூவரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →