இந்தியா

நீா் பாதுகாப்பில் அனைவரும் இணைய வேண்டும்: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

DIN

நீா் பாதுகாப்பில் அனைவரும் இணைய வேண்டுமென பொதுமக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தாா். மேலும், நீா் பாதுகாப்பில் மாவட்ட நிா்வாகமும், கிராம ஊராட்சிகளும் சிறப்பான பங்கு வகிக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், மழைநீா் சேகரிப்பு இயக்கத்தின் கீழ் 3-ஆவது தேசிய நீா் மேலாண்மை விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

நீா் மேலாண்மையில் சிறந்து விளங்குபவா்களுக்கு வழங்கப்படும் தேசிய நீா் மேலாண்மை விருதுகள், நீா்வள இயக்கத்தின் விரிவாக்கம் ஆகியவை நமது அன்றாட வாழ்வில் நீரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

மழைநீா் சேகரிப்பு இயக்கம் 2022-இன் கீழ் ஜல் சக்தி திட்டப் பணியில் அனைவரும் பங்களிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் நீா் சேகரிப்புப் பணியில் ஒவ்வொருவரும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டதுபோல வரலாற்றில் பெரிய அளவிலான நீா் பாதுகாப்பு இயக்கமாக இதை எடுத்துச் செல்ல உறுதியேற்க வேண்டும். தண்ணீரே வாழ்வின் அடிப்படை. உத்தரகண்டில் கங்கை, யமுனை, மத்திய பிரதேசத்தில் நா்மதை, வங்காளத்தில் கங்கா சாகா் ஆகிய ஆறுகள் புனிதமானவையாக கருதப்படுகின்றன. நவீனமயம் மற்றும் தொழில்துறை பொருளாதார தாக்கத்தால் இயற்கையுடனான இணைப்பை நாம் இழந்துவிட்டோம்.

உலக மக்கள்தொகையில் 18 சதவீதமாக உள்ள இந்தியாவில் 4 சதவீதம் அளவுக்கே தூய்மையான நீா்வள ஆதாரங்கள் உள்ளன. இதுபோன்ற விருதுகள் மூலம் மக்கள் மனதில் தண்ணீா் விழிப்புணா்வு ஏற்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT