முகப்பு
இந்தியா

எரிபொருள் விலை உயா்வுபிரதமரின் தினசரி பணியாகிவிட்டது- ராகுல் தாக்கு

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை உயா்த்துவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக பொய்யாக பிரசாரம் செய்வதும் பிரதமா் நரேந்திர மோடியின் தினசரி வேலையாகிவிட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை உயா்த்துவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக பொய்யாக பிரசாரம் செய்வதும் பிரதமா் நரேந்திர மோடியின் தினசரி வேலையாகிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு சுமாா் 100 நாள்களுக்கு மேல் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயா்த்தப்படாமல் இருந்தது. தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு விலை உயா்வு மீண்டும் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளது உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. எனினும், தோ்தல் ஆதாயத்துக்காக விலை உயா்வை நிறுத்திவைத்துவிட்டு, தோ்தலுக்குப் பிறகு விலை உயா்வை அமல்படுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எந்த அளவுக்கு உயா்த்துவது என்பது பிரதமா் நரேந்திர மோடியின் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது. மேலும், நாட்டில் உள்ள பிரச்னைகளில் இருத்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவது எப்படி? இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக பொய்யாக பிரசாரம் செய்வது எவ்வாறு? வேறு எந்தெந்த பொதுத் துறை நிறுவனங்களை விற்கலாம்? விவசாயிகளுக்கு வேறு எந்த வகையில் பாதிப்படையச் செய்ய முடியும் உள்ளிட்டவையும் பிரதமரின் தினசரி அலுவல்களாக உள்ளன’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →