இந்தியா

பழங்குடியினர் நலனுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

DIN

பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், நாட்டில் உள்ள பழங்குடியினரின் நலன் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக பல திட்டங்களை பழங்குடியினர் அமைச்சகம் அமல்படுத்துகிறது.

பழங்குடியினர் நலனுக்கு கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.37,802.94 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.51,283.53 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.52,024.23 கோடியும் ஒதுக்கப்பட்டதாகக் கூறினார்.

பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துடன், 40 மத்திய அமைச்சகங்கள், துறைகள் தங்களின் மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 4.3 முதல் 17.5 சதவிகிதத்தை பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்குகின்றன.  

இந்தத் திட்டங்களின் கீழ் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்ப்பாசனம், சாலைகள், வீடுகள், குடிநீர், மின்சார வசதி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் நாட்டில் உள்ள பழங்குடியினர் சமூக பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT