இந்தியா

கரோனா கட்டுப்பாடுகளை விலக்கியது மகாராஷ்டிரம்; முகக்கவசம் கட்டாயமில்லை

DIN


கரோனா தொற்றுப் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மகாராஷ்டிரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மராத்தி புத்தாண்டு ஏப்ரல் 2ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அன்று முதல் கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாகவும், முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல, விரும்புவோர் அணியலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT