பிரசாந்த் கிஷோா் 
இந்தியா

அரசியல் கட்சித் தொடங்குகிறாரா பிரசாந்த் கிஷோர்?

தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து, அவர் அரசியல் கட்சித் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

DIN

தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து, அவர் அரசியல் கட்சித் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, பிரசாந்த் கிஷோா் பல்வேறு ஆலோசனைகளை சில நாள்களுக்கு முன்னதாக வழங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இணைய, கட்சித் தலைவர் சோனியா காந்தி விடுத்த அழைப்பை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்தார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட பதிவில்,

“மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன். பிகாரிலிருந்து தொடங்கவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தில் பிறந்த பிரசாந்த் கிஷோர், ஐ-பேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாஜக, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்காக இவரது நிறுவனம் தேர்தலில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT