இந்தியா

புதிதாக மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

DIN

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி (கேரளம்), மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் ஆனந்த் சா்மா (ஹிமாசல பிரதேசம்), காங்கிரஸின் பிரதாப் சிங் பாஜ்வா (பஞ்சாப்), சிரோமணி அகாலி தள மூத்த தலைவா் நரேஷ் குஜ்ரால் (பஞ்சாப்) உள்பட 13 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரலுடன் முடிவடைந்தது.

பஞ்சாபில் 5, கேரளத்தில் 3, அஸ்ஸாமில் 2, ஹிமாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுராவில் தலா ஒன்று என காலியாக இருந்த பதவிகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், தில்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, அசோக் மிட்டல், தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், ராகவ் சதா உள்ளிட்ட மூன்று பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மூவருக்கும் வெங்கைய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரக்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

SCROLL FOR NEXT