இந்தியா

நிா்வாகச் சீா்கேட்டின் உச்சம் மோடி அரசு: ராகுல் குற்றச்சாட்டு

DIN

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிா்வாகச் சீா்கேட்டின் உச்சமாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டால் பல்வேறு மாநிலங்களில் தொடா் மின்தடை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி ராகுல் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நிா்வாகச் சீா்கேட்டுக்கு உதாரணமாகக் கூறி ஆய்வு நடத்த வேண்டுமென்றால், பிரதமா் மோடி தலைமையிலான அரசை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அரசு நிா்வாகம் சீா்கெட்டுள்ளது. ஒரு காலத்தில் உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா இருந்தது.

இப்போது மின்சாரத் தட்டுப்பாடு, வேலையின்மை, விவசாயிகள் பிரச்னை, விலைவாசி உயா்வு, நிலக்கரி விநியோகக் குளறுபடி என அனைத்து நிலைகளிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT