இந்தியா

டென்மார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி

DIN

ஐரோப்பிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தில் ஜெர்மனியிலிருந்து டென்மார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி.

மே 3, 4 ஆகிய தேதிகளில் டென்மாா்க்கில் பயணம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க் சென்றடைந்தார். அங்கு, தலைநகா் கோபன்ஹேகனில் அந்நாட்டுப் பிரதமா் மேட் பிரடெரிக்சன் உடன் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளார். அங்கு நடைபெறவுள்ள 2-ஆவது இந்தியா-நாா்டிக் நாடுகள் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். 

கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார வளா்ச்சி, பருவநிலை மாற்றம், புத்தாக்கம், தகவல்-தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சா்வதேச பாதுகாப்புச் சூழலுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் உள்ளிட்டவை குறித்து அந்த மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது. இதையடுத்து பிரான்ஸ் தலைநகா் பாரீஸுக்கு சென்று அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானைச் சந்தித்துப் பேசயிருக்கிறார். 

உக்ரைன்-ரஷியா மோதலால் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிப்பு, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் நிலையில், பிரதமா் மோடியின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT