இந்தியா

‘பிகாரில் 3,000 கி.மீ. நடைபயணம்’: பிரசாந்த் கிஷோரின் புது வியூகம்

DIN

பிகார் மாநிலம் முழுவதும் 3,000 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய பிரசாந்த் கிஷோர், கட்சியில் சேருவதற்கு சோனியா காந்தி விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையே, மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் என சமீபத்தில் அவர் வெளியிட்டர் டிவிட்டர் பதிவு வைரலானது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

“நான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நல்லாட்சி குறித்த கருத்தை மக்களிடம் கொண்டுசெல்வேன். இன்று கட்சித் தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை. பிகாரில் மாற்றத்தை விரும்பும் அனைவரையும் ஒன்றிணைக்க உள்ளேன்.

கட்சித் தொடங்குவது குறித்து வருங்காலங்களில் முடிவெடுக்கப்படும். கட்சித் தொடங்கப்பட்டால், அது பிரசாந்த் கிஷோர் கட்சியாக இருக்காது. மக்களின் கட்சியாக இருக்கும்.

அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் பல்வேறு மக்களை சந்திக்க உள்ளேன். பிகாரின் மேற்கு சாம்பரான், காந்தி ஆசிரமத்தில் இருந்து வரும் அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிலோ மீட்டர் நடைபயணத்தை தொடங்கவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தில் பிறந்த பிரசாந்த் கிஷோர், ஐ-பேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாஜக, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்காக இவரது நிறுவனம் தேர்தலில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT