பேருந்தில் பற்றிய தீ: நூலிழையில் தப்பிய 35 பயணிகள் (கோப்பிலிருந்து) 
இந்தியா

ஓடும் பேருந்தில் பற்றிய தீ: நூலிழையில் தப்பிய 35 பயணிகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று காலை பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியது. இதில் நல்வாய்ப்பாக 35 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினர்.

PTI


நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று காலை பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியது. இதில் நல்வாய்ப்பாக 35 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினர்.

இந்த பயங்கர சம்பவம் ரிசர்வ் வங்கி சதுக்கம் அருகே காலை 9.20 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

மோர் பவனிலிருந்து கபர்கேடா பகுதிக்கு ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தின் இஞ்சின் பகுதியிலிருந்து லேசான புகை வந்துள்ளது.

இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை செய்தார். பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து இறங்கவும் பேருந்து முழுக்க தீ பரவவும் சரியாக இருந்தது.

உடனடியாக தீயணைப்புப் படையினர் வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT