இந்தியா

உலக சுகாதார அமைப்பின் டேட்டாவும் காங்கிரஸ் பேட்டாவும் தவறு: பாஜக

IANS

புது தில்லி: கரோனா பலி எண்ணிக்கையை வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியிருக்கும் பாஜக, உலக சுகாதார அமைப்பின் டேட்டாவும் காங்கிரஸ் கட்சியின் பேட்டாவும் (மகன்) தவறு என்று தெரிவித்துள்ளது.

அறிவியல் பொய் சொல்லாது பிரதமர் மோடி சொல்வார் என்று ராகுல் காந்தி கூறியிருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கையை பாஜக வெளியிட்டிருக்கிறது.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, உலக நாடுகளில் கரோனாவுக்கு பலியானோர் புள்ளிவிவரத்தை உலக சுகாதார அமைப்பு கணக்கிட்ட முறையில் தவறு உள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு இந்தியாவின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதலே பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ராகுல் காந்தி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புக்ளை பதிவு செய்ய உரிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. உலக சுகாதார நிறுவன டேட்டாவும், காங்கிரஸ் கட்சியின் பேட்டாவும் (ராகுல் காந்தி) தவறு என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT