இந்தியா

சமஸ்கிருதத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஜே.பி.நட்டா

DIN

சமஸ்கிருதத்தை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தில்லியில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, “சமஸ்கிருத மொழி என்பதற்கு இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பயணிப்பது எனப் பொருள். சமஸ்கிருதத்தில் அறிவியல், கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் சாராம்சங்கள் உள்ளன. இதுவெறும் மொழி அல்ல. சமூகம் பல்வேறு கோணங்களில் வளர்ச்சியடைவதற்கான வழி மற்றும் பண்டைய கால அறிவை சமஸ்கிருதம் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,” சமஸ்கிருதம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பவர்களுக்கு பாஜக என்றுமே துணை நிற்கும்.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT