இந்தியா

ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கான அரசு காங்கிரஸ்: ராகுல் காந்தி

DIN


ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்காக ஆட்சி புரிவது காங்கிரஸ் மட்டும்தான் என கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை உயர்வு அடிப்படையில், 6 வாரங்களில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை சனிக்கிழமை உயர்த்தப்பட்டது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் ஒரு சிலிண்டர் விலை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் சனிக்கிழமை ரூ. 1,015.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிலிண்டர் விலை உயர்வை விமர்சித்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் பதிவு:

"2014-இல் காங்கிரஸ் ஆட்சியின்போது சிலிண்டர் விலை ரூ. 410. மானியம் ரூ. 827. 2022-இல் பாஜக ஆட்சியின்போது சிலிண்டர் விலை ரூ. 999. மானியம் ரூ. 0.

அப்போது இரண்டு சிலிண்டர் விற்கப்பட்ட விலைக்கு இன்று ஒரு சிலிண்டர் விற்கப்படுகிறது.

ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களுக்காக ஆட்சி புரிவது காங்கிரஸ் மட்டும்தான். அதுதான் நம் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT